வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை: 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் கிராமத்தை சேர்ந்த திருவள்ளூர் ஒன்றிய முன்னாள் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அகிலன் (43). சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த 7ம் தேதி வீட்டு வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சத்து 62 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகைகளை வைத்து ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
இந்த திருட்டு வழக்கில் கைரேகைகளை வைத்து விசாரித்ததில் ஆவடி பகுதியைச் சேர்ந்த தனசேகர் (எ) சஞ்சய் (18), பட்டாளம் பகுதியைச் சேர்ந்த லாசர் (20), வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (18) என்பது தெரிய வந்தது.
இந்த மூன்று பேரையும் கைது செய்து செவ்வாபேட்டை காவல் விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் இருந்து பத்து சவரன் நகை 750 ரூபாய் ரொக்கம் முக்கால் கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.