திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் தனியார் கம்பெனி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 3.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை, காவல் நிலையத்தில கொடுத்த புகாரின் பேரில் மர்ம நபர்களுக்கு காவல்துறையினர் வலைவீச்சு.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு எஸ்.வி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு ராகேஷ் என்ற மகனும், ஷர்மிலி என்ற மகளும் உள்ளனர். இதில் ரமேஷ் தாம்பரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். ராகேஷ் தியாகராயநகரில் தங்கி சோழிங்கர் அருகில் உள்ள ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். ஷர்மிலி ஹைதராபாத்தில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கி டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வைக்கிறார்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி ரமேஷும் அவரது மனைவி ரேவதியும் வீட்டை பூட்டிக்கொண்டு ஹைதராபாத்தில் உள்ள தனது தம்பி மகன் வளைகாப்பிற்காக சென்றுள்ளனர். நேற்று காலை இவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது என்று பின்பக்க வீட்டில் குடியிருப்பவர் இவர்களுக்கு செல்போனில் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை ராகேஷ் மட்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது, அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3.5 லட்சம் மதிப்புள்ள 8.5 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.