திருவள்ளூர் மாவட்டத்தில் கண் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்து பிரெய்லி முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக 60க்கும் மேற்பட்ட கண் பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரெய்லி முறையில் கண் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் மூலம் அதில் உள்ள வாசகத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பொன்னையா முன்னிலையில் படித்துக் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனை அடுத்து அனைத்து கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் இவர்கள் மூலமாக கண்ணியத்துடன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். இதுவரை 200க்கும் மேற்பட்டோர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும் பூத் ஸ்லிப்களும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.