காதலி இருந்த துக்கத்தில் ரயில் முன்பு பாய்ந்து காதலன் தற்கொலை
புற்றுநோயால் இறந்த காதலியின் பிரிவைத் தாங்க முடியாத காதலன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்;
புற்றுநோயால் இறந்த காதலி மரணத்தை தாங்க முடியாமல் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் காந்தி நகரைச் பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ்டோபர். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார், கிறிஸ்டோபர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.இவர்கள் காதல் இரு குடும்பத்திற்கும் தெரிந்து திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த கிறிஸ்டோபரின் காதலி 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். காதலித்த பெண் இறந்த சம்பவம் கடும் மன உளைச்சலில் இருந்த கிறிஸ்டோபர், தனது சகோதரிக்கு வாட்ஸ் ஆப்பில், செய்தி ஒன்று அனுப்பி வைத்து வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை இதில் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் கிறிஸ்டோபர் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆவடி ரயில்வே போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியின் பிரிவைத் தாங்க முடியாத காதலன் கிறிஸ்டோபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது