திருவள்ளூர் அருகே விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு பிரியாணி
பெரியபாளையத்தில் விஜயகாந்தின்71- வது பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
பெரியபாளையத்தில் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பிரியாணி வழங்கப்பட்டது.
பெரியபாளையத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் கட்சிக்கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, பிரியாணி, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 71-வது பிறந்த நாள் விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் பாபுராவ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் சிவகுமார், ஒன்றிய பொருளாளர் அதிர்ஷ்ட பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டில்லி ஆகியோர் கலந்து கொண்டு பெரியபாளையம், தண்டு மாநகர், பகுதிகளில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினர்.
மேலும் 20க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி 500பேருக்கு அறுசுவை பிரியாணி இனிப்புடன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னதாக அனைவரையும் ஒன்றிய துணைச் செயலாளர் மோகன், கோபால் ஆகியோர் வரவேற்றார். இதில் சேகர்,சௌந்தர், புஷ்பலதா நாராயண மூர்த்தி, வேலு, செல்வராஜ், மோகன், சரேஷ், பஞ்சாட்சரம், சந்தோஷ் குமார், ராமச்சந்திரன், கிரி பாபு, செந்தில்குமார், முருகானந்தம், ராமமூர்த்தி, சரத்குமார், சீனு, பாபு, சசிக்குமாரா, டில்லி, குமார் ஆகியோர் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வினோத் கலா நன்றி கூறினார்.