வேப்பம்பட்டில் வாக்குப்பதிவு பெட்டிகள் மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் சீல் வைப்பு
வேப்பம்பட்டில் வாக்குப்பதிவு பெட்டிகள் மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் சீல் வைத்து பூட்டப்பட்டது.
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு பெட்டிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை மைய இரும்பு அறையில் சீல் வைத்தனர். தமிழகத்தில் 16வது சட்டமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை முதல் 7 மணி வரை நடைபெற்று முடிவடைந்த நிலையில், அதன் ஒரு பகுதியான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி கும்மிடிப்பூண்டி மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பொன்னையா தலைமைையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஷ் மற்றும் குமார் ஆகியோர் முன்னிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியேக இரும்பு அறையில் சேர்க்கப்பட்டு முறையாக சீல் வைக்கப்பட்டது. இந்த பிரத்யேக அறையில் வைக்கப் பட்ட வாக்கு சேகரிப்பு பெட்டிகள் அடுத்த மாதம் இரண்டாம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.