திருவள்ளூர் அருகே தை கிருத்திகை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்

திருவள்ளூர் அருகே புள்ளரம்பாக்கம் கிராமத்தில் வள்ளி தெய்வானை குமார சுவாமிக்கு கிருத்திகையை முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம் நடந்தது.;

Update: 2024-01-20 12:45 GMT

பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள். 

தை கிருத்திகை முன்னிட்டு திருவள்ளூர் அடுத்த புள்ளரம்பாக்கம் கிராமத்தில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத குமாரசாமி சன்னதியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த புள்ளரம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத குமாரசாமி சன்னதியில் தை கிருத்திகை முன்னிட்டு பால்குடத் திருவிழா நடைபெற்றது.

இதில் 108.மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி வீதி உலா வந்து வள்ளி, தெய்வானை, குமாரசாமி மூலவருக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால் குடங்களில் உள்ள பாலை கொண்டு அபிஷேகம் செய்தனர்.

பின்னர் மூலவருக்கு தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், பட்டு உடைகளால் அலங்கரித்து, திரு ஆவணங்களால் அலங்காரம் செய்து தீப, தூப, ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இப்பா்குலத் திருவிழாவில் புளரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்.


Similar News