செங்குன்றத்தில் ஆவடி பெருநகர காவல் மாநகர ஆணையர் சங்கர் திடீர் ஆய்வு
செங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆவடி பெரு நகர் மாநகர காவல் ஆணையர் சங்கர் திடீர் ஆய்வு செய்தார்.;
ஆவடி போக்குவரத்து நெருக்கடி பிரச்சினை குறித்து மாநகர காவல் ஆணையர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆவடி பெருநகர மாநகர காவல் ஆணையர் சங்கர், செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் உள்ள போக்குவரத்து நெரிசல்,மக்கள் பிரச்னைகள், குற்றவியல் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சாலையில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தினந்தோறும் சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை, பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை, சாலையோரத்தில் அமைந்துள்ள நடைபாதை கடைகள் போன்றவற்றை காவல் ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் போக்குவரத்து நெரிசல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையரிடம் வலியுறுத்தினர்.அப்போது செங்குன்றம் பேருந்து நிலையம் சாலையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் திட்டம் உருவாக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆணையர் சங்கர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது உடன் போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஜெயலட்சுமி, செங்குன்றம் காவல் மாவட்ட ஆணையர் பாலகிருஷ்ணன், செங்குன்றம் சரக போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மலைச்சாமி,செங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ், காவல் ஆய்வாளர் மகேஷ்வரி, போக்குவரத்து உதவி ஆய்வாளர் விவேகானந்தன், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத் தலைவர் ஆர்.இ.ஆர். விப்ர நாராயணன் உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் அரசு, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் எஸ்.கே. வரதராஜன், துணைத் தலைவர் ஷண்முக சுந்தரம், செயலாளர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர்.