திருவள்ளூர்: வேப்பம்பட்டில் ஆஸ்திரேலிய நாட்டு அரியவகை ஆந்தை பிடிபட்டது!

வேப்பம்பட்டில் ஆஸ்திரேலிய நாட்டு அரியவகை ஆந்தையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

Update: 2021-06-07 13:56 GMT

வேப்பம்பட்டில் பிடிபட்ட ஆஸ்திரேலிய நாட்டு அறிய வகை ஆந்தை.

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் குடியிருப்பு பகுதியில் இன்று காலை திடீரென அரியவகை ஆந்தை ஒன்று கீழே விழுந்துள்ளது. இதனை பார்க்க அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் கூடினர்.

பறக்க முடியாமல் தட்டுத் தடுமாறிய நிலையில் கிடந்த அந்த ஆந்தையை மீட்ட சமூக ஆர்வலர் பாலமுருகன்,  இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நீண்ட நேரம் கழித்து வந்த வனத்துறையினர் அந்த ஆந்தையை மீட்டு அதற்கு முதலுதவி சிகிச்சையினை அளித்தனர். இது ஆஸ்திரேலிய நாட்டு அரியவகை அந்த என்றும், பிற பறவைகள் தாக்கப்பட்டு கீழே விழுந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அதனை எடுத்துச் சென்றனர்.

Tags:    

Similar News