திருவள்ளூரில் ஆடிட்டர் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூரில் ஆடிட்டர் கடிதம் எழுதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-10-25 05:30 GMT

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆடிட்டர் குமரகுரு.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் லேக் வியூ அவென்யூ பகுதியில் ஆடிட்டரான ஏ.குமரகுரு(வயது-33) வசித்து வருகின்றனர்.

இவர் காக்களூரில் ஏ.கே.டெக்ஸ் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பல நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளை செலுத்தி கொடுக்கும் தொழில் செய்து வரும் செய்து வருகிறார்.

கடந்த திங்கட்கிழமை ஜிஎஸ்டி கணக்கு சம்மந்தமாக கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் ஆடிட்டர் ஏ.குமரகுரு தன்னுடன் சேர்த்து 430 பேரிடம் ரூ. 100 கோடி GST மோசடி செய்ததாக புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து 23/10/2024 புதன்கிழமை அன்று ஆடிட்டர் குமரகுரு திருவள்ளூர் எஸ்பி. அலுவலகத்தில் புகார் கொடுக்க வழக்கறிஞர்களுடன் வந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த பிரேம்குமார், என் மீதே புகார் கொடுக்க வந்திருக்கிறாயா. உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விட்டதாக ஆடிட்டர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் 10.லட்சம் ரூபாய் கேட்டு பிரேம்குமார் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மீண்டும் எஸ்.பி.அலுவலகத்திற்கு ஆடிட்டர் குமரகுருவாள் பாதிக்கப்பட்டதாக கூறி பிரேம்குமார் எஸ்.பி. அலுவலகத்தில் மற்றொரு புகார் மனு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.மணி அளவில் ஆடிட்டர் குமரகுரு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆடிட்டர் குமரகுரு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் இன்று காலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் அவரது வீட்டில் இருந்து அவரது தாயார் புகைப்படம் அருகில் ஆடிட்டர் குமரகுரு உருக்கமாக எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரது காரில் 2.50 லட்சம் ரொக்கமும் லேப்டாப்பையும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது யாரேனும் அடித்து தூக்கில் தொங்க விட்டார்களா என போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News