செங்குன்றத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்ற அர்ஜுன் சம்பத்

செங்குன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்பில்.100 ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-10-07 08:15 GMT
செங்குன்றத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

செங்குன்றம் அருகே நடந்த ஆர்.எஸ்.எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலத்தில் அர்ஜுன் சம்பத் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) தொடங்கப்பட்டு 99ஆவது ஆண்டு நிறைவடைந்து 100ஆவது ஆண்டு தொடங்குகிறது. இந்த தருணத்தை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள 57 இடங்களில் நேற்று அணிவகுப்பு ஊர்வலங்கள் நடந்தன. ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட 100ஆம் ஆண்டு, காந்தி ஜெயந்தி, வள்ளலார் ஜெயந்தி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் சார்பில் மாநிலம் முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில் காக்கி, வெள்ளை என ஆர்.எஸ்.எஸ் சீருடையுடன் அர்ஜுன் சம்பத் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அணிவகுத்து சென்றனர். பாடியநல்லூர் திடலில் தொடங்கிய பேரணி செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டுச்சாலை சென்றடைந்து சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியே மீண்டும் திடலை வந்தடைந்தது. பேண்டு வாத்தியங்கள் முழங்க சென்ற ஊர்வலத்தில் வழி நெடுகிலும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீது பொதுமக்கள் பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வழி நெடுகிலும் சுமார் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News