திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு இடையே வாக்குவாதம்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-18 03:00 GMT

வாக்குவாதத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்கள்.

திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் அர்சகர்களுக்கும்,கோயில் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் முகம் சுளித்து சென்றனர். திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் காலை சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் 10 நாள் உற்சவம் துவங்கியது.

இந்நிலையில் கொடியேற்று வதற்காக கொடிமரத்தின் மீது சுற்றி பெரிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடை மேல் அர்ச்சகர்கள் ஏறி நின்று பூஜைகள் செய்யும்போது மேடை அசைவு ஏற்பட்டதால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கோயில் அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களிடம் மேடையை சரியாக அமைக்காததால் நாங்கள் மிகவும் அச்சத்துடன் கொடி ஏற்ற வேண்டிய நிலைமை உள்ளது என கேட்டதற்கு, கோயில் ஊழியர்கள் நாங்கள் இரவும் பகலும் எவ்வளவு வேலை பார்க்கிறோம். இது ஒரு குறையாக கூறுகிறீர்களே என்று அவதூறு வார்த்தைகளால் பேசியதால் அர்ச்சகர்களுக்கும் அலுவலக ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் புனித இடத்தில் இருக்கும் போது இது போன்ற தவறான வார்த்தைகளை உபயோகித்து பேசுகிறார்கள் என பக்தர்கள் முகம் சுளித்து சென்றனர் இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News