கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றில் ரூ. 20 கோடியில் பாலம் கட்ட கோரிக்கை

கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணியை விரைவாக தொடங்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-11-28 10:24 GMT
ஆரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் காட்சி.

ரூ.20 கோடி செலவில்புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் மேம்பாலம் கட்டும் பணியை விரைவாக துவக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையத்தில் இருந்து எல்லாபுரம் ஒன்றியம் அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே வர ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்நிலையில்,ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் பருவ மழை பெய்து அந்த ஏரி நிரம்பியவுடன் ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவார்கள்.இந்த தண்ணீரானது பாலேஸ்வரம் அணைக்கட்டுக்கு வந்து சேரும்.இந்த அணை நிரம்பியவுடன் ஆரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அப்பொழுது இந்தத்தரைபாலம் நீரில் மூழ்கிவிடும்.

இதனால் காரணி,எருக்குவாய், முக்கரம்பாக்கம்,நெல்வாய், மங்களம்,எருக்குவாய் கண்டிகை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரியபாளையம் வழியாக பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சென்று தங்களது அன்றாட பணியை மேற்கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இந்நிலையில்,கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது இந்தத் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.இந்தத் தரைப்பாலத்தை ஆய்வு செய்ய அன்றைய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள்,வருவாய் துறை அதிகாரிகள் வந்திருந்தனர். மேலும்,தரைப்பாலத்தை ஆய்வு செய்த அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் இப்பகுதியில் ரூ.20 கோடி மதிப்பில்உயர்மட்ட மேம்பாலம் ஒன்று கட்டிமுடிக்கப்படும் என்று உறுதி கூறினார்.மேலும், இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்று கூறினார்.


ஆனால்,உயர்மட்ட மேம்பாலம் கட்டமான பணி இன்னும் துவக்கவில்லை. எனவே,இப்பணியை விரைவில் துவங்கி சிறப்பாக கட்டி முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் தாங்கள் பகுதியில் பெரும்பாலும் மக்கள் விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்தி நடத்தி வருவதாகவும், தங்கள் பகுதியில் விவசாயிகள் பெரும்பாலும் கத்திரி, வெண்டை, முள்ளங்கி, காராமணி, கீரை வகைகள், நெற்பயிர்கள் பூக்கள் உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு அவற்றை அறுவடை செய்து சென்னை, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பொன்னேரி, ஆரணி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக செல்வதற்காக இந்த தரைப்பாலத்தைக் கடந்து சென்று பேருந்துகள் மூலம் மேற்கண்ட பகுதிகளுக்கு தாங்கள் விளைவிக்கும் பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாகவும். தற்போது தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது மட்டுமன்றி தாங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல இந்த தலைப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும் மழைக்காலத்தில் தரைப்பாலத்தில் தண்ணீர் வந்து விட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையும் ஏற்படுவதாகவும் இதனால் மிகவும் இன்னலுக்கு ஆளாகுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News