திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ரமணா வழங்கினார்.

Update: 2024-09-27 12:45 GMT

திருவள்ளூரில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கொட்டு மழையிலும்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தின் போது, திடீரென பலத்த மழை பெய்த போதிலும், நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குடை பிடித்தப்படியே அக்கட்சியினர் அமர்ந்திருந்தனர்.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவானது முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர்கள் பபிதா, அன்பழகன், புதூர் மணி,ஆகியோர் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றையும் ஆட்சித் திறமையும் எடுத்துக் கூறி உரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து பேசிய தலைமை கழக பேச்சாளர் பபிதா, கூறுகையில் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுகவின் ஆட்சியானது தீய செயலால் தமிழகமே தத்தளிக்கும் நிலைமையில் உள்ளதாகவும்,தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா பரவி உள்ளதாகவும், அதற்கு பள்ளி மாணவர்கள் கூட அந்த பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகவும்,பெண்கள் சாலையில்தனியாக நடந்து சொல்லும்போது கஞ்சா போதை ஆசாமிகள் கையைப்பிடித்து இழுக்கிற அளவுக்கு‌ இந்த திமுக ஆட்சி நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் கூட்டத்தின் இடையில் பலத்த மழை வந்த பொழுதும் கூட்டத்துக்கு வந்திருந்த பெண்களுக்கு நல திட்ட உதவிகளை‌ முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினார்.இதில் திருவள்ளூர் நகர கழக செயலாளர் கந்தசாமி,கடம்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சூரகாபுரம் சுதாகர், பூண்டி ஒன்றிய கழக செயலாளர் மாதவன்,திருவலங்காடு ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல், திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார்,மற்றும் 500க்கு மேற்பட்ட ‌கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News