மணவாளநகரில் தானியங்கி இயந்திரம் மூலம் ரூ.2-க்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

Update: 2021-08-18 08:05 GMT

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் சமூக விலகலை கடைபிடித்தல், அத்தியாவசிய பொருள்களை வாங்கச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கபசுரக் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெங்களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பேருந்து நிலையத்தில் ஊராட்சி மன்றம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து தானியங்கி முகக்கவச விற்பனை இயந்திரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்டது.

மணவாள நகர் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முகக்கவசம் இல்லாமல் வரும்போது 2 ரூபாய் செலுத்தி முகக்கவசம் பெற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும் என தனியார் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், வெங்களத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுனிதா பாலயோகி, பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலயோகி, மாவட்ட கவுன்சிலர், கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தானியங்கி இயந்திரம் மூலம் முகக் கவசங்களை பெற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News