திருவள்ளூர் அருகே அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கமம்
திருவள்ளூர் அருகே 25 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மீண்டும் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் அரசுப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளியூரில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த 1996ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த முன்னாள் மாணவர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் தங்களுடன் பயின்ற நண்பர்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டதால் ஒருவரையொருவர் ஆரத் தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.
தங்களது ஆசிரியர்களை சந்தித்து அவர்களின் கால்களில் விழுந்த முன்னாள் மாணவர்கள் பாத பூஜை செய்து மாலை அணிவித்து ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.