திமுக அரசை கண்டித்து திருவள்ளுரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 62 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-06-24 09:45 GMT

திமுக அரசைக் கண்டித்து திருவள்ளூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் உயிரிழந்தததற்கு பொறுப்பேற்று, திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக அரசைக் கண்டித்து திருவள்ளூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மருத்துவ கல்லூரி அருகே சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் உயிரிழந்ததற்க்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா.பென்ஜமின், மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம் ,மாவட்ட செயலாளர்கள் சிறுனியம் பலராமன், அலெக்சாண்டர், முன்னாள் எம்பிக்கள் வேணுகோபால், திருத்தணி கோ.அரி, முன்னாள் எம்எல்ஏ.க்கள் திருவொற்றியூர் குப்பன், பூந்தமல்லி மணிமாறன், விஜயகுமார், பொன்ராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  தி.மு.க அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின், ஈவு இரக்கமில்லாமல் 62 உயிர்களை கொன்று குவித்த திமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். 62 பேர் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறு நடப்பதற்கு முன்பு நடவடிக்கை எடுத்திருந்தால் 62 உயிர்கள் போயிருக்கது என்றும், சூரியன் மறைந்த பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் என கோஷங்களை எழுப்பினார். காவல் துறை ஆர்ப்பாட்டத்தில் மேடை அமைக்கக் கூடாது, இருக்கைகள் போடக் கூடாது என கட்டுப்பாடுகள் விதித்தது கண்டனத்திற்குரியது எனவும் குற்றம் சாட்டினார்.

Similar News