அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணா தனது மனைவியுடன் வாக்களிப்பு

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணா மனைவியுடன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Update: 2021-04-06 09:56 GMT

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணா  மனைவியுடன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நடைபெறுகின்ற 16வது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணா திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வி.எம் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்ய வருகை தந்தார்.

மனைவி லதாவுடன் வருகைதந்த வேட்பாளர் பி.வி. ரமணா வரிசையில் நின்று வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து கையை உயர்த்தி காட்டி வெற்றியின் சின்னத்தை காட்டினார். அதேபோல் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில்  வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News