திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டம்

திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-07-03 09:45 GMT

புரட்சி பாரதம் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு கூட்டத்தில் ஜெகன் மூர்த்தி பேசினார்.

திருவள்ளூரில் புதிய பாரதம் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி கலந்து கொண்டு வழக்கறிஞர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மூர்த்தி கூறியதாவது:-

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா அல்லது முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதா என்பதை சட்ட ரீதியாக தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த புரட்சி பாரதம் கட்சி பொதுநல வழக்கு தொடர இருக்கிறது. மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. மக்கள் அங்கீகரிக்கும் பட்சத்தில் நடிகர்கள் கூட நாட்டை ஆள உரிமை உள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News