திருவள்ளூரில் தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து திருவள்ளூரில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-04 10:29 GMT

திருவள்ளூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூரில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை மகளிர் அணி மாணவர் அணி சார்பில் விடியா தி.மு.க. அரசில் தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கல தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

திருவள்ளூரில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை மகளிர் அணி மாணவர் அணி சார்பில் மருத்துவக் கல்லூரி அருகே விடியா திமுக அரசில் தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கல தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பிவி.ரமணா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா பெஞ்சமின்,மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர்கள் பி. பலராமன், அலெக்ஸாண்டர், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் திருத்தணி கோ.அரி, திருவேற்காடு பா சீனிவாசன், முன்னாள் எம்பி வேணுகோபால், முன்னாள் எம்எல்ஏ.க்கள், குப்பன்,மணிமாறன்,. விஜயகுமார்,உள்பட ஒன்றிய, நகர பேரூர் நிர்வாகிகள், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணியினர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு  திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின், போதைப் பொருளால் மாணவர்கள் சீரழிவதற்கு விடியா திமுக அரசே காரணம் என குற்றம் சாட்டினார். சட்டம் ஒழுங்கு சீரழிவு காரணமாகவும், பொறுப்பேற்ற நாள் முதல் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாததால் திமுக அரசு மீது மக்கள் வெறுப்பில் இருப்பதால் வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலோடு திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பிவி.ரமணா, போதைப் பொருட்கள் தயாரிப்பதற்கு மூலப் பொருளே தமிழ்நாட்டிலிருந்து அதுவும் திமுக முக்கிய பிரமுகர் மூலம் கடத்தப்படுவது உறுதியானதையடுத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார். இதில் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், நிர்வாகிகள் சூரகாபுரம் சுதாகர், பூண்டி மாதவன், திருவாலங்காடு சக்திவேல், நகர செயலாளர் கந்தசாமி, நிர்வாகிகள் பாலாஜி, நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், சுமித்ரா வெங்கடேசன், கேபிஎம் எழிலரசன், ஜோதி, குமரசேன், தியாகு உள்பட 2 ஆயிரத்துற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விடியா திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News