திருவள்ளூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-11-09 09:06 GMT

பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்.

10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில். ஒரு சிறுவன் உள்பட 3 பேர் மீது வழக்கு ஒருவன் கைது 14 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் சேர்ப்பு தலைமறைவான இளைஞருக்கு போலீஸ் வலை.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர், கசவநல்லாத்தூர் பகுதியை சேர்ந்த 10 ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக. அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஒருவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 14 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தலைமறைவான ஒரு இளைஞனை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர், கசவநல்லாத்தூரில் வசித்து வரும் 15 வயது சிறுமி. இவர் கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவரது மகன் ஆரா என்கிற ஆரோக்கியராஜ் (23). இவர் வீடு வீடாகச் சென்று பால்பாக்கெட் போடும் தொழில் செய்து வந்தார். இவர் அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தையிடம் பேசிவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 20. 01.2022 அன்று சிறுமியின் தந்தை வீட்டில் இல்லாத போது வந்த இளைஞர் ஆரா என்கிற ஆரோக்கியராஜ் மாணவியிடம் நான் உன்னை காதலிக்கிறேன் திருமணம் செய்து கொள்கிறேன் என  ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த 2022 ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பலமுறை உறவு வைத்துக் கொண்ட ஆரா என்கிற ஆரோக்கியராஜ் அதன் பிறகு பேசவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் 15 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதே பகுதியை சேர்ந்த சுப்பு என்கிற சுகுவனேஸ்வரன் (22) என்ற இளைஞரும் மாணவியை  கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த 03.11.2023 அன்று மாணவிக்கு மயக்கம் ஏற்படவே வீட்டின் அருகில் இருந்தவரிடம் கூறியுள்ளார் உடனடியாக அவரை கடம்பத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று டாக்டரிடம் காண்பித்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவி திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நகர போலீஸ் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின், சப் இன்ஸ்பெக்டர் சுசிலா ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஆரா என்கிற ஆரோக்கியராஜை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.14 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள சுகு என்கிற சுகுவனேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News