திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-05-16 10:28 GMT

திருவள்ளூர் அருகே கணவர் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒண்டிக்குப்பம் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த்(வயது28) தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஒண்டி குப்பம் சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்த பவானி(25) என்ற பெண்ணுக்கும் 4. ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு பிரியாஸ்ரீ ,என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரசாந்துக்கு தனது நிறுவனத்தில் பணியாற்றும் வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்தப் பெண்ணுடன் பிரசாந்த் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தத் தகவலை அறிந்த பவானிக்கும் பிரசாந்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனையடுத்து பிரசாந்த் வீட்டிற்கு சரி வர வராமல் அவருடன் பணி செய்யும் மற்றொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததில் இதில் மனம் உடைந்த பவானி நேற்று வீட்டின் அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரம் ஆகியும் பவானி வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர் அப்போது பவானி மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கியே நிலையில் இருந்தார்.  இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பவானியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக மணவாளநகர் காவல் நிலையத்தில் பவானி தாய் உஷா தன் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News