நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.;

Update: 2022-05-24 02:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் புட்லுார் கிராமத்தில் வசிப்பவர் ஸ்ரீதர். இவருக்கு சாருகேஷ் (வயது17),என்கிற மகன் இருந்தார். இவர் 11 வகுப்பு படித்து வந்தார்.நேற்று மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றான்.

பின்னர் அங்குள்ள தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றான். நீச்சல் தெரியாத காரணத்தினால் திடீரென தண்ணீரில் . முழுகி காணாமல் போனான். அப்பகுதியில் உள்ளவர்கள் தகவலறிந்து கிணற்றில் குதித்து நீண்ட நேரம் தேடி மாணவனை  மீட்டு மப்பேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு பரிசோதித்த டாக்டர் மாணவன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து மாணவனின் உடலை கீழச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்த மப்பேடு போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News