கல்லூரி மாணவரிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு
Student News -சென்னை அருகே கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.;
Student News -திருத்தணியில் இருந்து சென்னை வரை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருத்தணி அரக்கோணம் கடம்பத்தூர் திருவள்ளூர் ஆகிய பகுதியிலிருந்து புறநகர் ரயிலில் பயணம் செய்து பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்களிடையே ரயிலில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று இதனால் ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று அறிவுரைகள் வழங்கி வந்தனர்.இந்நிலையில் ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பச்சையப்பன் கல்லூரி தக்கோளம் பகுதியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவன் தினேஷ் தலையில் பலத்த அரிவாள் வெட்டு பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அருவாள் வெட்டு காயங்களுடன் கல்லூரி மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2