திருவள்ளூர் அருகே பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
Girl Suicide - திருவள்ளூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
Girl Suicide -திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பட்டரைபெருமந்தூர் வன்னியர் தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு. இவரது மனைவி பேபி. இவர்களின் மகள் ஸ்ரீலேகா. (13) இவர் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மதுராந்தகம் வில்வநாயகபுரம் அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அங்கு படிக்க விருப்பம் இல்லாத காரணத்தால் தனது சொந்த ஊரான பட்டரைபெருமந்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக 9 ஆம் வகுப்பு சேர்ந்து படித்து வந்தார்.
இந்நிலையி்ல் ஸ்ரீலேகாவின் தாய் பேபி வீட்டு வேலை எதுவும் செய்யாதது குறித்து கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கம் போல் பெற்றோர் கொத்தனார் வேலைக்குச் சென்றுவிட்டனர்.ஆனால் மாணவி ஸ்ரீலேகா பள்ளிக்கு செல்லாமல் வீட்டை பூட்டிக் கொண்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.
வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மும்தாஜ் என்பவர் வீட்டின் கதவை தட்டியபோது யாரும் திறக்காததால் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே எட்டி பார்த்துள்ளார். டில்லிபாபுவின் மகள் ஸ்ரீலேகா வீட்டில் உள்ள பேனில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஸ்ரீலேகாவின் தந்தை டில்லிபாபுவுக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்த ஸ்ரீலேகாவின் சடலத்தை மீட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவள்ளூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் பெற்றோர் அடிக்கடி வீட்டு வேலை செய்ய சொல்லி கூறியதால் மாணவி பாடப்பிரிவு மேல் கவனம் செலுத்தாமல் முடியாமல் மன உளைச்சலில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ?அல்லது வேறு ஏதாவது காரணத்துக்காக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? என்பது குறித்து பெற்றோரிடத்தில் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து முதல் கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2