கள்ளக்குறிச்சி சம்பவம்; தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, திருவள்ளூரில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-06-26 07:45 GMT

தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

எல்லையில் நாட்டுக்காக போராடும் ராணுவ வீரர் உயிரிழந்தால் தமிழகத்தின் சார்பில் 2 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் சார்பில் ஐந்து லட்சம் நிதி வழங்கப்படுகிறது. ஆனால்,  கள்ள சாராயம் குடித்து தமிழகத்தில் உயிரிழந்தால் மட்டும் 10 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுகிறது என திருவள்ளூரில் நடைபெற்ற தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பேசினார்.

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து, தேமுதிக சார்பில்,  திருவள்ளூர் மருத்துவ கல்லூரி எதிரே ஆர்பாட்டம்  நடைபெற்றது.

திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, டில்லி, சங்கர் தலைமை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக இளைஞரணி செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கு.நல்லதம்பி கலந்து கொண்டு பேசியதாவது,

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட எஸ்பி, ஆட்சியரை பணிஇடைநீக்கம் செய்ததை விட அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

நம் நாட்டுக்காக எல்லையில் போராடும் ராணுவ வீரர் உயிரிழந்தால் தமிழகத்தின் சார்பில் 2 இலட்சமும், மத்திய அரசின் சார்பில் 5 லட்சமும் வழங்கப்படுகிறது. ஆனால் கள்ள சாராயம் குடித்து தமிழகத்தில் உயிரிழந்தால் மட்டும் 10 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. இது மது குடிப்பவர்களை ஊக்குவிப்பது போல உள்ளது, மதுக்கடைகளின் மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், ஆட்சிக்கு வந்தவுடன் ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்திய திமுக என்ன நடவடிக்கை எடுத்தது.

ஆனால் தற்போது கள்ள சாராயங்கள் கிராமங்கள் தோறும் வழிந்து ஓடுவதாக ஆளும் கட்சியான திமுக ஆட்சி மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, டில்லி, உன்கிட்ட ஒன்றிய, நகரம் கிளைக் கழக நிர்வாகிகள் என ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News