சோழவரம் அருகே ஒரு நாள் மட்டும் இலவச மருத்துவமனையாக மாறிய தனியார் பள்ளி

சோழவரம் அருகே ஆங்காடு ஊராட்சியில் ஒரு நாள் மட்டும் இலவச மருத்துவமனையாக தனியார் பள்ளி மாறி பொதுமக்களுக்கு சேவை செய்து உள்ளது.

Update: 2024-03-11 10:30 GMT
தனியார் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர்.

சோழவரம் அருகே கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மட்டும் இலவச மருத்துவமனையாக தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்த நிலையில் 500 க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக மருந்தும் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே ஆங்காடு பகுதியில் செயல்படுகிறது ஸ்ரீ கிரிஷ் இண்டர்நேஷனல் பள்ளி.இந்த பள்ளியை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மட்டும் இலவச மருத்துவமனை போல் செயல்பட்டது.


இதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.மாணவர்களின் ஒவ்வொரு வகுப்பறைகளுக்கும் மருத்துவர்கள் அறையாக மாற்றப்பட்டு 15 க்கும் மேற்பட்ட வகுப்பறைகளில் பொது மருத்துவம், இருதயம், எலும்பியல்,மகப்பேறு,மகளிர், குழந்தைகள், கண்,காது,மூக்கு,பல் என தனித்தனியாக 15க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.அவர்களுக்கு தேவையான மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

இதில் பெண்கள்,குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனையோடு மருந்துகளும் வழங்கப்பட்டன.பள்ளியின் தாளாளர் ஜெய்கார்த்திக் மருத்துவர் என்பதால் கிராம மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் இதனை செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News