பெரியபாளையம் அருகே ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெரியபாளையம் அருகே உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்ற பின் கொசுத்தலை ஆற்றில் குளிக்க சென்ற கூலி தொழிலாளி நீரில் மூழுகி உயிரிழந்தார்.

Update: 2023-11-28 09:57 GMT
நீரில் மூழ்கி உயிரிழந்த சீனிவாசன்.

பெரியபாளையம் அருகே உறவினர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின் கொற்றலை ஆற்றில் குளிக்க சென்று நபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த வெங்கல் அருகே காதர்வேடு கிராமம் விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). கூலி தொழிலாளி இவருடைய அண்ணி இந்திராணி உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார் அவருடைய இறுதிச் சடங்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  பின்னர் சீனிவாசன் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள கொற்றலை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

குளித்துக் கொண்டிருந்தபோது சீனிவாசன் கால் இடறி ஆழமான பகுதியில் விழுந்துள்ளார். அப்போது ஆற்றில் குளிப்பதாக வந்த நபர்கள் இதைக் கண்டு உடனடியாக சீனிவாசன் மூழ்கிய இடத்திற்கு சென்று நீண்ட நேரம் தேடி அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தபோது அவர் மூச்சு திணறி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரியவந்தது. இதுகுறித்து வெங்கல் போலீசருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கல் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்துபோன சீனிவாசன் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன நபருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், இரண்டு மகள்கள் ஒரு மகனும் உள்ளனர். குளிப்பதற்கு சென்று கால் தவறி ஆழமான பகுதி சென்று கூலி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News