புழல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது

புழல் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-08-23 14:53 GMT

கைது செய்யப்பட்ட சுரேஷ் அந்தோணிராஜ்.

புழல் அருகே வீட்டில் தனியாக இருந்த 12வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, நெற்குன்றதை சேர்ந்த சுரேஷ் அந்தோணிராஜ் (37) வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் புழல் பகுதியில் வசித்து வந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு வட்டிக்கு 20000 பணம் கொடுத்து தினந்தோறும் காலையில் சென்று பணம் வசூலித்து வந்துள்ளார். வழக்கம் போல பணம் வசூலிக்க சென்ற போது வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில் தனியாக இருந்த 8ஆம் வகுப்பு படிக்கும் 12வயது சிறுமிக்கு சுரேஷ் அந்தோணிராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் மறுநாள் பெற்றோர் வீட்டில் மறைந்திருந்தனர். அப்போது பணம் வசூலிக்க வந்த சுரேஷ் அந்தோணிராஜ் மீண்டும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார். அப்போது மறைந்திருந்த பெற்றோர் சுரேஷ் அந்தோணிராஜை கையும் களவுமாக பிடித்து புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 12வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சுரேஷ் அந்தோணிராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News