வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மீது தாழ்வாக சென்ற மின் கம்பிகள் உரசி, தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-08-26 05:15 GMT

திருவள்ளூர் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

திருவள்ளூர் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின் ஒயரில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனியை சேர்ந்தவர் சங்கர், இவருடைய விவசாய நிலத்தில் இருந்து வட மாநிலத்தை சேர்ந்த ராம், என்பவர் தனது கால்நடை பண்ணைக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றி சென்ற லாரி சித்தூர் மாவட்டம் பாலநேரி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆரிப், என்பவர் ஓட்டிச் சென்றபோது திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியில் சாலையின் குறுக்கே தாழ்வாக சென்ற மின் கம்பியின் மீது வைக்கோல் உறாசிதால் லாரியில் ஏற்றிச்சென்று வைக்கோல் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது‌.


இதனை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் லாரி ஓட்டுனரிடம் தெரிவித்த போது லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு வைக்கோல் மீது கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டார், மேலும் எரிந்து கொண்டிருந்த வைக்கோல் கட்டுகள் திருப்பாச்சூர் சாலையில் விழுந்தன அதைத் தொடர்ந்து லாரி முழுவதும் தீ மள மள வென பற்றி எரிய தொடங்கியது.

டிரைவர் ஆரீப், சாதுரியமாக லாரியை ஓட்டிச் சென்று சாலை ஓரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிறுத்திவிட்டனர், அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இரண்டு பேரும் உயிர்த்தப்பினார்கள்.

தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து‌எரிந்து கொண்டிருந்த லாரி மீது தண்ணீரை பீச்சி அடித்து தீயை‌ அணைத்தனர்,இதனால்சென்னை,திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கரும் புகை மண்டலமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர், இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News