திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட நூலகம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட புதிய நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கலை நயத்துடன் கட்டப்பட்ட நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக டாக்டர் பிரபு சங்கர் பதவி ஏற்ற பின் இங்கு சிறப்பான ஒரு நூலகத்தை கட்ட வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பிரதான நுழைவாயிலின் வலது புறம் மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்கு அருகே காலியாக இருந்த இடத்தை நூலகமாக மாற்றலாம் என்ற எண்ணம் மாவட்ட ஆட்சியருக்கு தோன்றியது.
இதையடுத்து திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே ரூ.1கோடி செலவில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த. பிரபுசங்கர் முன்னிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் சா.மு. நாசர், எம்பி சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் எஸ் பி சீனிவாச பெருமாள், எம்எல்ஏக்கள் திருவள்ளூர் வி. ஜி ராஜேந்திரன், திருத்தணி எஸ் சந்திரன், பூந்தமல்லி ஏ.கிருஷ்ணசாமி, கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன், பொன்னேரி துரை சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திட்ட அலுவலர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், வட்டாட்சியர் வாசுதேவன், மற்றும் அரசு அனைத்து துறை அதிகாரிகள், திருவள்ளூர் நகர் மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன், வி. சி.ஆர்.குமரன்,சி.ஜெரால்டு, துணைத் தலைவர் சி.சு. ரவிச்சந்திரன், திமுக ஒன்றிய செயலாளர்கள்ஆர்.ஜெயசீலன், மகாலிங்கம், ஹரி கிருஷ்ணன், கூளூர் ராஜேந்திரன், கொண்டஞ்சேரி ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், சிவசங்கரி உதயகுமார், முன்னாள் நகர் மன்ற தலைவர் பொன் பாண்டியன், டி.ஆர்.திலீபன் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், சமூக அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டார்.