செங்குன்றம் அருகே மர்ம காய்ச்சலால் உயிரிழந்த 7 வயது சிறுவன்
செங்குன்றம் அருகே பாடியநல்லூர் ஊராட்சியில் மர்ம காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.;
உயிரிழந்த சிறுவனின் வீட்டின் சோகமாக குடும்பத்தினர்.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் மர்ம காய்ச்சலால் ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, செங்குன்றம் அடுத்த பெரியார் நகர் சங்கர் -கோவிந்தம்மாள் இவர்களுடைய மகன் சிவா (வயது7). இவர் கடந்த ஒரு வார காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் சாதாரண காய்ச்சலாக இருக்கும் என பெற்றோர்கள் நினைத்துக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய மருந்தகத்தில் மருந்து வாங்கி கொடுத்து இருக்கின்றனர்.
இந்தநிலையில் காய்ச்சல் அதிகமாகவே செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனின் மர்ம காய்ச்சல் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியானதாக தெரிய வருகிறது.இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை சார்பில் இது குறித்து செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுவனின் மர்ம காய்ச்சல் குறித்து விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர் .இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..ஏழு வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.