திருத்தணி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.;

Update: 2022-02-01 08:15 GMT

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள தெக்களுர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குட்டி(22) கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை, தனியே அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில், மகளிர் போலீசார் ராஜ் கட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News