திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.;
இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் பேரில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற 18 வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் முதல் தொகுதியான திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் 10,24,149 ஆன் வாக்காளர்களும், 10,61,457 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 385 பேரும் என 20,85,991 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு நல்ல தம்பியும் , பாஜக சார்பில் பொன் வி பாலகணபதி உள்பட 14 பேர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் காலை 7 மணிக்கு 2256 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. அதன்படி 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் உள்ள 20,85,991 வாக்காளர்களில் பதிவாங வாக்குகள் 1423885 ஆகும் .அதன்படி மொத்த வாக்குகள் சதவிகிதம் 68.26 பதிவாகி இருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதனையடுத்து வாக்கு பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெருமாள் பட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சட்டமன்ற தொகுதி வாரியாக சரி பார்த்து அறையில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.