திமுக பிரமுகரிடம் 60ஆயிரம் கொள்ளை..!

இந்தியன் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்த திமுக பிரமுகரிடமிருந்து ரூ.60ஆயிரம் பணம் கொள்ளை.

Update: 2021-04-28 03:36 GMT

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (53) இவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் நேற்று பேரம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள இந்தியன் வங்கி கிளையில் இருந்து 60ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வதாக வெளியே வந்துள்ளார்.

அப்போது வங்கி வாசலில் இரு சக்கர வாகனத்தில் முககவசம் அணிந்து இருந்த இளைஞர் நின்றிருந்தார். அப்போது வங்கியிலிருந்து பின்னால் வந்த இளைஞர் பன்னீர்செல்வம் பையில் கொண்டு வந்த 60,000 ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

இது குறித்து பன்னீர்செல்வம் மப்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில்:- வங்கியில் பணம் எடுக்கும் போது அருகிலேயே நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தான் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது பணத்தை பிடுங்கிக் கொண்டு வங்கி வாசலில் நின்றுகொண்டிருந்த இளைஞருடன் தப்பி ஓடி விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வங்கி அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News