6.ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட குளியலறையை சீரமைத்து தர கோரிக்கை

ஊத்துக்கோட்டை அருகே செங்கரை காட்டுச் செல்லி அம்மன் கோவில் அருகே பக்தர்கள் வசதிக்காக கட்டி முடிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத குளியலறை கட்டிடத்தை சீரமைத்து தர கிராம மக்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-14 07:30 GMT

ஊத்துக்கோட்டை அருகே செங்கரை கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு,6 ஆண்டுகள் ஆகியும் பயன்படுத்தாமலே காட்சி பொருளாக கிடக்கும் கழிவறை மற்றும் குளியலறை கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோயிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை அதிகாரிகள் அலட்சியம்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை அடுத்த செங்கரை கிராமத்தில் காடு பகுதியில் புகழ்பெற்ற காட்டுச்செல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபாடு நடத்தி தரிசனம் செய்து செல்வார்கள்.

இவ்வாறு இக்கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெண் பக்தர்களே அதிக அளவில் வருவதால் அவர்கள் அங்குள்ள குளத்தில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள் . பின்னர் அவர்கள் உடை மாற்றிக்கொள்ள பகுதியில் உள்ள மரம் மற்றும் செடிகளின் அருகில் மறைவாக சென்று மாற்றி வந்தனர். இந்நிலையில் பெண்களுக்காக குளிக்கவும், உடை மாற்றவும் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்களும் பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். 

அப்போதைய கும்மிடிபூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சி.எச்.சேகர் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ₹ 4.75 லட்சம் செலவில் 2011 - 2012 ம் ஆண்டு பெண்களுக்காக கழிவறை மற்றும் குளியலரை கட்டிடம் கட்டிக்கொடுத்தார். இதை கோயிலுக்கு வரும் பக்தர்களும் , அப்பகுதி மக்களும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த கழிவறை மற்றும் குளியறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 6 வருடங்கள் மட்டுமே பயன்பட்டது பின்னர் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாடற்று அடர்ந்த முட்பொதர்கள் வளர்ந்து விஷ பூச்சிகளுக்கு இருப்பிடமாக மாறியது.

இதனால் கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள் குளிப்பதற்கும் உடை மாற்றுவதற்கும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் எனவே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கட்டிக்கொடுத்த குளியலறையை சீரமைத்து தர வேண்டும் , மேலும் அங்குள்ள சிமெண்ட்டால் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி குடிநீர் இல்லாமல் சேதம் அடைந்துள்ளது. எனவே இதையும் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் தெரிவிக்கையில் : -

எங்கள் செங்கரை கிராமத்தில் புகழ் பெற்ற காட்டுச்செல்லியம்மன் கோயில் உள்ளது இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வார நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மன் தரிசனம் செய்து செல்கின்றனர். என் பக்தர்கள் பாதுகாப்பு கருதி அருகில் அப்போதைய கும்மிடிபூண்டி சி.எச்.சேகர் தொகுதி நிதி ₹ 4.75 லட்சம் செலவில் குளியலறை மற்றும் கழிவறை கட்டப்பட்டது இதில் கடந்த சில வருடங்களாக தண்ணீர் வசதி இல்லாததால் அதை பயன்படுத்துவதே இல்லை, இந்த கழிவறை மற்றும் குளியலறையை சுற்றி அடர்ந்த முள் புதர்கள் வளர்ந்து காட்சியளிக்கிறது. எனவே இவைகளை அதிகாரிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். தற்போது அருகில் உள்ள சமுதாய கூடத்தை தான் பெண்கள் குளிப்பதற்கும், உடைமாற்று வதற்கும் பயன்படுத்துகிறார்கள் அதிலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தால் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள் .

மேலும் இந்த பகுதியில் உள்ள சிமென்ட் தொட்டி தண்ணீர் இல்லாமல் குழாய்கள் உடைந்துள்ளது எனவே இதையும் சீரமைக்க வேண்டும் ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் அவர்கள் அலட்சியமாகவே உள்ளனர் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News