அடையாளம் தெரியாத வாகனம் மோதி 5 மாடுகள் உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே பட்டரைபெருமந்தூர் திருப்பதி-சென்னை தேசிய சாலையில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி 7 மாடுகளில் 5 மாடுகள் உயிரிழப்பு.2 மாடுகள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை உள்ளது.;
திருவள்ளூர் அருகே பட்டரைபெருமந்தூர் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் சாலையோரத்தில் உயிரிழந்துள்ளதாக ரோந்து காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது,சென்னை திருப்பதி நெடுஞ்சாலையின் சாலை ஓரத்தில் இரு பக்கங்களிலும் மாடுகள் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து 7 மாடுகளில் 5 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் 2 மாடுகள் கால்கள் உடல் உள்ளிட்ட பகுதிகளில் அடிபட்டு ரத்தம் வெளியேறும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகின்றன.
மேலும் சம்பவ இடத்திற்குச் சென்ற ரோந்து காவல் துறையினர் மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுகளை இடித்து விட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர்,பட்டரை பெருமந்தூர், புல்லரம்பாக்கம், மணவாள நகர், வெங்கத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சென்னை திருப்பதி நெடுஞ்சாலைகளில் இதுபோன்று கேட்பாற்று சுற்றித் திரியும் மாடுகள் மீது லாரிகள், மற்ற இரு சக்கர வாகனங்கள் மோதி கால்நடைகள் உயிரிழப்பதும்,கால்நடைகள் மீது வாகன ஓட்டிகள் மோதி வாகன ஓட்டிகள் காயம் அடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் இதுபோன்று அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.
மாடுகளின் உயிரிழப்பால் சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் வாகனங்கள் இரு பக்கங்களில் அணிவகுத்து நின்று மெதுவாக ஊர்ந்து செல்கின்றன போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 5 மாடுகள் உயிரிழந்து.2 மாடுகள் உயிருக்கு ஆபத்தானநிலையில் உள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.