ஊத்துக்கோட்டை அருகே குட்கா, போதை பொருட்கள் கடத்தி வந்த 4 பேர் கைது
ஊத்துக்கோட்டை அருகே போலீசாரின் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 41 கிலோ குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் கடத்துவதாக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தமிழக-ஆந்திரா எல்லை நாகலாபுரம் சோதனை சாவடி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் வைத்திருந்த பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சுமார்41 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களையும், குட்கா போதை பொருட்களையும் பறிமுதல் செய்து இவை கடத்தி வந்த சென்னை அம்பத்தூர் கல்லிகுப்பத்தைச் சேர்ந்த வேழவேந்தன் (வயது-55), வெங்கடசுப்புலு (வயது-48), கொடுங்கையூர் பகுதியை சார்ந்த பரமசிவம் வயது-62), சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த மேகலா (வயது-35) ஆகிய நான்கு பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.