திருவள்ளூர் அருகே 30சவரன் நகைகள், ரூ. 1.75 லட்சம் பணம் கொள்ளை
திருவள்ளூர் அருகே உள்ள மகள் திருமணத்திற்காக சேமித்து வைத்த 30 சவரன் தங்க நகைகள், பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.;
திருவள்ளுர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த கொமக்கம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (55). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் சென்னை முகப்பேருக்கு வேலைக்கு சென்றிருந்தார். அவருடைய மனைவி, மகன், மகள் மூவரும் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர்கள் ஜன்னல் கதவை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். எலக்ட்ரீசியன் வேலை செய்து தனது மகளுக்கு திருமணத்திற்காக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் 1,75,000 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகாரளித்தார். புகாரையடுத்து, வழக்கு பதிவு வெங்கல் காவல்துறையினர் கொள்ளையர்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.