செங்குன்றம் அருகே சாலை தடுப்புச் சுவரில் கார் மோதி 3 பேர் உயிரிழப்பு

செங்குன்றம் அருகே அலமாதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2024-09-09 05:15 GMT

விபத்தில் சிக்கி உயிரிழந்த தாய்,4 வயது சாய் மோனிஷா. (கோப்பு படங்கள்)

செங்குன்றம் அருகே சாலையின் தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் தாய், மகள் என 3 பேர் உயிரிழந்தனர்.கணவர் மற்றும் மற்றொரு மகன் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல்(வயது 52), இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி மனைவி உஷாராணி (வயது 48), தம்பதியினர். இவர்களுக்கு சாய் மோகித்(4) மற்றும் சாய் மோனிஷா(4) ஆகிய இருவரும் இரட்டையர். இந்த நிலையில் உஷாராணியின் தாய் வீடான சென்னை சிந்தாதிரிப்பேட்டைக்கு வாடகை கார் ஒன்றில் 4 பேரும் பயணித்துக் கொண்டிருந்தனர்.அப்போது செங்குன்றம் அருகே அலமாதி என்ற பகுதியில் சென்ற போது சாலையில் தடுப்பில் கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.


இதில் காரின் முன் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது.இந்த விபத்தில் உஷாராணி அவரது (4 வயது மகள் சாய் மோனிஷா) மற்றும் வாடகை கார் ஓட்டுனர் அனஸ்( வயது 30) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜெயவேல் மற்றும் (4 வயது சாய் மோகித் மோனிஷா ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே உயிரிழந்த வாடகை கார் ஓட்டுநர் மற்றும் தாய்,மகள் ஆகியோரது சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர்,இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் தாய் மற்றும் நான்கு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News