முட்டை வியாபாரி வீட்டில் 27 சவரன் தங்க நகைகள் திருட்டு

திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே முட்டை வியாபாரி வீட்டில், பூட்டை உடைத்து 27 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-14 04:15 GMT

திருட்டு நடந்த வீட்டில் விசாரணை நடத்திய போலீசார்.

திருவள்ளூர் அருகே 20 நிமிடங்களில் முட்டை வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 27 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பட்டப் பகலில் கைவரிசை காட்டிய திருடர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் முத்தமிழ் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராமு( வயது 55)- இவரது மனைவி தீபம் (வயது 52) ராமு மற்றும் மனைவி தீபம். கடம்பத்தூர் பகுதியில் முட்டை கடை நடத்தி வருகிறார்.


வழக்கம்போல் நேற்று ராமு காலை கடைக்கு சென்று கடை திறந்து வியாபாரம் செய்து விட்டு மதியம் 3 மணி அளவில் தனது மனைவி தீபத்தை கடையில் வியாபாரத்திற்கு அனுப்பிவிட்டு மதிய உணவு சாப்பிட்டு மீண்டும் கடைக்கு சென்று உள்ளார்,

கணவர் கடைக்கு வந்த பின்னர் ராமுவின் மனைவி தீபம் தனது வீட்டிற்கு மதியம் 3.30 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டுள்ளது. உடனடியாக தன் கணவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். பின்னர் இது குறித்து கடம்பத்தூர் போலீசாருக்கு அளிக்கப்பட்டது.


தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து  27  சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடப்பட்டு உள்ளது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் கைவரிசை காட்டிய திருடர்களை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் 20 நிமிடத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News