வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒரு அலகில் பழுது
வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒரு அலகில் பழுது சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கிய சூழலில் மீண்டும் மற்றொரு அலகில் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிப்பு
வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒரு அலகில் பழுது சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கிய சூழலில் மீண்டும் மற்றொரு அலகில் 210மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நேற்று 1வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த அலகில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 210மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் 1வது நிலையின் 1வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒரு அலகில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கிய சூழலில் மற்றொரு அலகில் மீண்டும் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.