திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1,100 கிலோ கஞ்சா பறிமுதல்; 300 வழக்குகள் பதிவு

Ganja Crime -திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1,100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக காஞ்சி சரக காவல்துறை துணை தலைவர் சத்யபிரியா தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-23 02:15 GMT

தனியார் கல்லூரி மாணவர்களிடையே காஞ்சி சரக காவல்துறை துணை தலைவர் சத்யபிரியா போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Ganja Crime -திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி மாணவர்களிடையே காஞ்சி சரக காவல்துறை துணை தலைவர் சத்யபிரியா, மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஷ்கல்யாண் ஆகியோர் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது பேசிய காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சத்திய பிரியா, திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப் பொருள் அண்டை மாநிலங்களில் இருந்து மாவட்டத்திற்கு வருவதை தடுப்பதில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

கஞ்சா வேட்டை ஒன்று மற்றும் இரண்டில் இதுவரை 1,100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, கஞ்சாவுக்கு மட்டுமே 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில்  65 குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள் திருவள்ளூர் மாவட்டத்தில் முடக்கப்பட்டு, எங்கிருந்து பணம் வருகிறது யார் கொடுக்கிறார்கள் என்பதை புலனாய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் நபர் யார் என முழு விபரத்தையும் பெற்று அதிகபட்ச தண்டனையாக குண்டர் சட்டத்தில் அடைக்கும் நடைமுறையும் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல் முறைப்படுத்தி வருவதாக காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News