சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோவிலில் 108 நட்சத்திர சங்காபிஷேகம்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோவிலில் 108.நட்சத்திர சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.;
சிறுவாபுரி பாலசுப்பிரமணிசாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சிறுவாபுரி முருகன் கோவிலில் 108 நட்சத்திர சங்காபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம். பெரியபாளையம் அடுத்த சின்னம்பேடு சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு தொடர்ச்சியாக 6.வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இக்கோவிலில் 1.கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கோபுர கலசங்களின் மீது புனிதநீர் ஊற்றி 19.ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேகம் முடிவுற்று ஓராண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு 108. நட்சத்திர சங்காபிஷேகம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து பல்வேறு சிறப்பு பூஜை நடத்தப்பட்டடு முருகப்பெருமானுக்கு 108. சங்காபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை முதல் மூலவருக்கு பால், தயிர்,சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீர், இளநீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேங்கள் நடைபெற்றது. பட்டு உடைகளாலும், வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது.மூலவர் பாலசுப்பிரமணியர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயிலை சுற்றி பவனி வந்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.