செவ்வாப்பேட்டை பாலத்திற்கு 10 வருடத்துக்கு பின் தீர்வு, மக்கள் மகிழ்ச்சி

செவ்வாப்பேட்டை ஊராட்சியில் அமைந்துள்ள பாலத்திற்கு 10 ஆண்டுகளுக்கு பின்பு தீர்வு கிடைத்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Update: 2021-07-21 18:09 GMT
பைல் படம்

செவ்வாப்பேட்டை ஊராட்சியில் மக்களின் பயன்பாட்டிற்காக உள்ள பாலமானது மிகவும் குறுகலாக உள்ளதாகவும், மேலும் அதனை சீரமைத்து தரும்படியும் பல்வேறு கோரிக்கைகளை செவ்வாபேட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சிராணி அன்பு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் அரசு சார்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற கூட்டத்தில் கலந்துகொண்ட செவ்வாபேட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி அன்பு பாலத்தை விரிவுபடுத்தி சீரமைத்து தரும்படி மனு ஒன்றை அளித்தார்.

இதனை பெற்றுக்கொண்ட ஸ்டாலின், அது சம்பந்தமான அதிகாரிகளுக்கு கட்டளையிட்டத்தின் பேரில் இறுதிக்கட்ட ஆய்வு பணிக்காக நீர்வளத் துறை பொறியியல் அதிகாரி ஜார்ஜ் மற்றும் துணை பொறியியல் அதிகாரி பழனிகுமார் மற்றும் சண்முகம் ஆகியோருடன் ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி அன்பு ஆகியோர்கள் அது சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து பாலம் கட்டுவதற்கான அளவைக் குறித்துக் கொண்டு மற்றும் அதற்கான பணிகள் சில மாதங்களில் தொடங்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.

இந்த நிகழ்வின் ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அண்ணாமலை ஆகியோர்கள் உடனிருந்தனர். பாலம் கட்டுவதற்கான பணிகள் சில மாதங்களில் தொடங்கப்படும்.

இந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுக்கு சரியான தீர்வு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

Similar News