திருவள்ளூரில் கொரோனாவுக்கு 10 பேர் பலி

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.;

Update: 2021-05-16 07:11 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இரண்டாயிரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 79,022 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். அதில் 70,292 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 7830 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பலனின்றி நாள்தோறும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். அந்தவகையில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடுமையான தொற்றால் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 7 மணி வரை 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இந்த மருத்துவமனையில் தினந்தோறும் 250க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்ய வருகின்றனர். அதில் 70 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்படுகிறது.

Tags:    

Similar News