பூண்டி துணை மின் நிலையத்தை நேரில் ஆய்வு செய்த திருவள்ளூர் எம்எல்ஏ!
பூண்டி துணை மின் நிலையத்தினை நேரில் சென்று ஆய்வு செய்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்.;
பூண்டி துணை மின் நிலையத்தினை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆய்வு செய்த காட்சி.
திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட பூண்டி துணை மின் நிலையத்திற்கு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் துறை அலுவலர்களுடன், தடையில்லா மின் வினியோகம் மற்றும் விவசாய தொழில் மற்றும் பொது மக்களின் தேவைகளுக்காக மின்சாரம் வழங்குவது தொடர்பாக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ஆலோசனை வழங்கினார்.