இசை மொழியும் ஆதீ இனமும் நூலுக்கு பாராட்டு சான்றிதழ்
இசை மொழியும் ஆதீ இனமும் நூலை பாராட்டி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சான்றிதழும் பரிசு தொகையும் வழங்கினார்.;
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள முரிச்சம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் மு.வெ.ஆடலரசு. இவர் ஆதித்தமிழர் கலைக்குழுவின்ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் இசை மொழியும் ஆதீஇனமும் என்ற தலைப்பில் நூல் எழுதி அதனை வெளியிட்டுள்ளார் இதனையடுத்து இந்நூலை திருவள்ளூர் கலெக்டர் ஆல்பிஜான்வர்கீசிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் 2018&-2019 மற்றும் 2019&2020 ஆண்டிற்கான தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களில் மு.வெ.ஆடலரசுவை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது. அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி கலைச்செல் வி உடனிருந்தார். முன்னதாக ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் அ.வினோத் இவரை பாரா ட்டியுள்ளார். இசைமொழியும் ஆதீ இனமும் நூல் எழுதி வெளியிட்டாரை திருவள்ளூர் கலெக்டர் பாராட்டி சான்றிதழ் பரிசு தொகை வழங்கினார்.