ஊரடங்கை மீறியவர்களின் பைக், செல்போன் பறிமுதல்: போலீசார் அதிரடி!

பூந்தமல்லியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களின் மோட்டார் சைக்கிள், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-05-14 13:07 GMT

ஊரடங்கை மீறி சுற்றியவர்களின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொது ஊரடங்கு அமலில் உள்ளது. பொது ஊரடங்கை மதிக்காமல் வாகனங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித்திரியும் வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே தேவையின்றி சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததோடு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்களின் உரிமையாளர்களிடமிருந்து செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

செல்போன் பறிமுதல் செய்தபோது

மேலும் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்தவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்ததோடு அவர்களின் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் தரப்பில் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டது.

பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்தவர்களின் மோட்டார் சைக்கிள் மட்டுமல்லாது செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News