சென்னை வானகரத்தில் விதிமுறைகளை மீறி மீன் வியாபாரம்: தொற்று பரவும் அபாயம்!

சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் கூடியது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-13 09:07 GMT

சென்னை வானகரம் மீன்மார்க்கெட்டில் மீன்வாங்க சமூக இடைவெளியை மறந்து குவிந்துள்ள கூட்டம்.

கொரனோ வைரஸ் தொற்றின் 2ம் அலை பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை விதித்து அதற்கான விதிமுறைகளை பின்பற்றுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவை பலரும் மீறி செயல்பட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் 14ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே இருக்கும் மீன் சந்தையில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் தொடர்ந்து விதிமுறைகளை மீறி சில்லறை வியாபாரிகள் வந்து மீன் வாங்கி செல்கின்றனர். சுமார் 1000க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி மீன்வாங்க வருவதால் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் இந்த மீன் மார்க்கெட் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. நோய் தொற்று வேகமாக பரவுவதற்கு முன்பாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News